குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் சத்தான சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு இடியாப்பம்..!! எப்படி செய்வது..??

Oplus_131072

குழந்தைகளுக்கு இந்த ஆரோக்கியம் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு இடியப்பம் செய்து கொடுங்கள்.

அந்தவகையில், குழந்தைகள் விருப்பி உண்ணும் சத்தான சர்க்கரை வள்ளிக்கிழங்கு இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளி கிழங்கு- 5
அரிசி மாவு- 1 கப்
உப்பு- 1 சிட்டிகை
தேங்காய்- 1
செய்முறை
முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை இட்லி பாத்திரத்தில் வேகவைத்து நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.

பின் வேகவைத்த சர்க்கரைவள்ளி கிழங்கை தோலுரித்து நன்கு மசித்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இதனுடன் அரிசிமாவு, உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து பிணைந்த மாவை இடியப்பம் போல் பிழிந்து அதன் மேல் தேங்காய் துருவல் சேர்த்து வேகவைத்து எடுத்தால் சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு இடியாப்பம் தயார்.

Read Previous

ரத்த அழுத்தம் முதல் புற்றுநோய் வரை அனைத்திற்கும் தீர்வளிக்கும் கூனைப்பூ..!! எப்படி தெரியுமா..??

Read Next

ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular