சத்தான இட்லி பொடி செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க பெண்களே..!!

Oplus_131072

சத்தான இட்லி பொடி செய்வது எப்படி….

தேவையான பொருட்கள் :

கருப்பு உளுந்து – 2 கப் (தோல் உள்ள உளுந்து )

கடலை பருப்பு – 1 கப்

துவரம் பருப்பு – 1 கப்

பொட்டு கடலை – 1 கப்

வர மிளகாய் – 10 – 15 (உங்க காரத்திற்கு ஏற்ப ..நாம் மிளகும் சேர்க்க போகிறம் . அதனால மிளகாய் தேவைக்கு எடுத்துகோங்க)

மிளகு – 1 ஸ்பூன் (டேபிள் ஸ்பூன் )

எள்ளு – 1/4 கப்

பெருங்காய தூள் – 1 ஸ்பூன் (டேபிள் ஸ்பூன் ) (கட்டி பெருங்காயம் கூட வறுத்து சேர்த்துக்கலாம் )

கறிவேப்பிலை – 1 பெரிய பௌல் (இங்கே பாக்கெட் ல கிடைக்கும் நான் 2 பாக்கெட் வரை போடுவேன் .உங்க விருப்பம் போல எடுத்துக்கலாம்)

உப்பு ருசிக்கேற்ப

எண்ணெய் 1 ஸ்பூன்

செய்முறை :

கறிவேப்பிலையை உருவி கொஞ்சம் உப்பு தண்ணீரில் ஊற வைத்து வடிக்கட்டி ஒரு துணியில் நிழலில் உலர்த்தி வைத்து கொள்ளவும்..வெயிலில் உலர்த்தினால் கசந்து விடும் ..வாசனையும் போய்விடும் .
தண்ணீர் இருக்க கூடாது .அப்போ தான் இட்லி தூள் நாள் பட வைத்து கொண்டாலும் கெட்டு போகாது .

அடுப்பில் ஒரு பெரிய pan வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்து எடுத்து கொள்ளவும் .

பிறகு அதில் கருவேப்பிலையை போட்டு சிறுது வதக்கி பின் அதில் கடலை பருப்பை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும் .

இவ்வாறு வறுப்பதால் கருவேப்பிலை நன்றாக வறுபடும் , கசந்தும் போகாது , வாசமும் இருக்கும் .பொடியும் கெட்டு போகாது .

பிறகு மிளகு போட்டு வறுத்து அதனுடன் துவரம் பருப்பை போட்டு வறுத்து கொள்ளவும்.

பிறகு உளுந்தை வறுத்து கொள்ளவும் .பிறகு எள்ளை போட்டு வெடித்தவுடன் எடுத்து கொள்ளவும் ..எள்ளு வருபட அதிக நேரம் ஆகாது .பொட்டு கடலை வருக்க தேவையில்லை .

மேல சொன்ன பொருட்களில் மிளகாய் , கறிவேப்பில்லைக்கு வறுக்க தான் ஒரு ஸ்பூன் எண்ணெய் தேவை .மற்றவை வறுக்க எண்ணெய் தேவை இல்லை .

இவற்றுடன் தேவையான உப்பு பெருங்காய போடி சேர்த்து கொரப் கொரப்பாக அரைத்து கொள்ளவும் .காத்து போகாத டப்பாகளில் வைத்திருந்தால் நாள் பட நன்றாக இருக்கும் .

தோல் உளுந்து உம்பிற்கு மிகவும் சத்து நிறைந்தது .. கருவேப்பிலை யும் மிகவும் சத்து நிறைந்த பொருள் .ஆனால் அதிகம் பேர் மற்றும் குழந்தைகள் சாப்பிடும் போது இதை ஒதுக்கி விடுவர் .இப்படி பொடியில் அறைத்தோமானால் அவர்கள் சாப்பிட்டு விடுவார்கள் .உளுந்து , கருவேப்பிலை இரண்டும் இரும்பு சத்து மற்றும் நார் நிறந்த பொருள் .பெண்களுக்கு மிகவும் நல்லது .

மேலே சொன்ன பொருட்களில் உங்க விருப்பம் போல(சுவை கேற்ப ) கூட்டி குறைத்து கொள்ளளலாம் .நான் செய்யும் அளவை கொடுத்துள்ளேன் .உப்பு காரம் சரியா சேர்த்துக்கோங்க .

 

Read Previous

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்..!! எது தெரியுமா..??

Read Next

நீங்கள் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும் என்பதை உணர வைத்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular