சமையலை ருசியாக்க குறிப்புகள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!

Oplus_131072

சமையலை ரு‌சியா‌க்க கு‌றி‌ப்புக‌ள்……

 

குடைமிளகாய் ஸ்டஃப்பிங் செய்யும்போது அது முழுதாய் பிளக்காமல், மேல் காம்பு மட்டும் எடுத்து, உள்ளே ஸ்டஃப் செய்து சமையுங்கள். சாப்பிடவும் ருசியாகக் காணப்படும், பார்ப்பதற்கு கண்ணைக் கவரும்….

நார்த் இண்டியன் டிஷ் செய்யும் போது சிறிதளவு சர்க்கரை சேருங்கள். காரத்தை தூக்கிக் காண்பிக்கும். ஸ்பைசியாகவும் காணப்படும்…..

எப்போதும் ஒரே விதமான ரசம் வைத்து சலிப்படைந்தவர்கள் முருங்கைக்காயில் ரசம் வைக்கலாம். தக்காளியுடன் ஐந்து பீஸ் முருங்கை நறுக்கிப் போட்டு செய்து பாருங்கள். வாசனையும், சுவையு‌ம் இது எ‌ன்ன புது‌க் கு‌ழ‌ம்பு எ‌ன்று கே‌ட்பா‌ர்க‌ள்…..

எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும். வெங்காயத்தை நீரில் அலம்பிவிட்டு நறுக்குங்கள். ஆக்ஸிடைஸ் ஆவதால் நிகழும் அழுகை குறையும்…..

அரோக்கியத்திற்கு, கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்…..

 

Read Previous

நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா..?? இதைக் குடித்தாலே போதும்..!!

Read Next

ஃப்ரிட்ஜ்களில் முட்டை மற்றும் பாலை சேமித்து வைத்து பயன்படுத்துபவரா.. நீங்கள்..?? இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular