சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படிங்க..!!

 

இந்த நவீன காலகட்டத்தில் பலரும் சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதனால் பிடித்த உணவுகளை சாப்பிட முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். நம் உடலில் தேவையான அளவிற்கு இன்சூரன்ஸ் இல்லாமல் இருந்தால் குளுக்கோசின் லெவல் அதிகமாகும். இவ்வாறு குளுக்கோஸ் இன் அளவு உடம்பில் அதிகம் ஆவதால் தான் சர்க்கரை நோய் வருவதற்கு காரணம். நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சர்க்கரை நோயை கட்டுக்குள் வர வைக்க முடியும்.

வெந்தயம்

வெந்தயம் என்பது எல்லா வீட்டு சமையல் அறையிலும் எளிதாக கிடைக்கும் ஒரு பொருள். இது உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும் வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவு சத்து, இரும்பு, சோடியம் உள்ளிட்ட பல வகையான சத்துக்கள் உள்ளது. இரவில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் நன்றாக வசித்து அதனை வடிகட்டி அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இல்லையென்றால், நாலு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை கலந்து அதனை அடுப்பில் நன்றாக கொதிக்க வைத்து ஆரிய பின்னர் அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இல்லையென்றால் வெந்தயத்தை முளைகட்டி சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்

வெண்டைக்காய்
வெண்டைக்காயை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் ரதத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கலாம். வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பான பகுதி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது. இதை ஒரு லிட்டர் தண்ணீரில் எடுத்து அதில் மூன்று அல்லது நான்கு வெண்டைக்காயை சிறிது சிறிதாக வெட்டி போட வேண்டும் மறுநாள் காலையில் வெண்டைக்காய் எடுத்து நல்லா பிழிந்து விட்டு அந்த தண்ணீரை குடித்து பாருங்கள் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி புற்றுநோய் வராமல் தடுக்கிறது. நெல்லிக்காயில் ஜூஸ் செய்து குடிக்கலாம். இவ்வாறு செய்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

ஒரு நாள் வெந்தயம் தண்ணீர், மற்றொரு நாள் வெண்டைக்காய் தண்ணீர், மற்றொரு நாள் நெல்லிக்காய் தண்ணீர் என குடித்து பாருங்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். சர்க்கரை நோய் உள்ளவர்களே மறக்காமல் இதை நீங்கள் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

Read Previous

பெண்களே உங்களது வீட்டில் நேர்மறையான சக்தியும் அதிர்ஷ்டமும் வர இதை மட்டும் செய்ங்க போதும்..!!

Read Next

மாரடைப்பு ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?? அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular