சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மேற்கிந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் (37) ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இவர், ஜமைக்காவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருடன் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், ரஸலின் ஓய்வு மேற்கிந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.




