சாணக்கிய நீதி: வீட்டில் இந்த அறிகுறிகள் இருக்கா?.. அப்போ பணகஷ்டம் வரபோகுதுன்னு அர்த்தம்..!!

பொதுவானவே அனைவரும் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றோம்.

ஆனால் அனைவரின் வாழ்விலும் இன்பம் மற்றும் துன்பம் என்பது நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது.

வாழ்கை முழுவதும் இன்பத்தை மட்டுமே அனுபவித்தவர்களும் இல்லை அது போல் துன்பத்தை மட்டுமே அனுபவித்தவர்களும் இல்லை என்பதே உண்மை.

ஒருவர் செய்யும் செயல்களுக்கு ஏற்பவே அவர்களுக்கான பலன்களும் கொடுக்கப்படுவதாக இந்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

நாம் அனைவருமே வாழ்வில் ஒரு காலத்தில் மகிழ்ச்சியை அனுபவித்தால் குறிப்பிட்ட காலத்துக்கு துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி.

சாணக்கிய நீதியின் அடிப்படையில் நமக்கு பணகஷ்ட வரப்போவதை வீட்டில் நடக்கும் சில நிகழ்வுகளை கொண்டு கணித்துவிடலாம். அப்படிப்பட அறிகுறிகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

வாடும் துளசி செடி

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் துளசி செடி மிகவும் புனிதத்தன்மை வாய்ந்தாக கருதப்படுகின்றது.இது வீட்டில் லட்சுமியின் வடிவமாக பார்க்கப்படுகின்றது. சாணக்கிய நீதியின் அடிப்படையில் செல்வத்தை வழங்க கூடிய துளசி செடி வாடுவது பாரிய நிதி இழப்பு மற்றும் பணப்பிரச்சினை ஏற்பட போவதன் அறிகுறியாகும்.

தினசரி சண்டை

சாணக்கியர் கூற்றின் அடிப்படையில் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருந்தால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாவார்கள் இதனால் வாழ்வில் பாரிய நிதி பிரச்சினை ஏற்படும் என்பது நம்பிக்கை.

கண்ணாடி உடைதல்

சாஸ்திரங்களின் அடிப்படையில் கண்ணாடி பொருட்கள் மங்களகரமானதாக கருதப்படுகின்றது. வீட்டில் கண்ணாடி உடைவது துர்திஷ்டத்தை ஏற்படுத்தும். மேலும் பணகஷ்டம் ஏற்படப்போவதன் அறிகுறியாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

பூஜை இல்லாத வீடு

சாணக்கியர் கூற்றுப்படி வீட்டில் தவறாமல் பூஜை செய்ய வேண்டியது முக்கியம். அதன் மூலம்  வீட்டிற்கு லட்சுமி தேவி வருவார் என நமடபப்படுகின்றது. பூஜை அறை தூசி படிந்து காணப்படுவதும் கெட்ட நேரம் ஆரம்பமாவதை குறிக்கின்றது. அதனால் பாரிய நிதி இழப்பு ஏற்படும்.

பெரியோரை அவமரியாதை செய்வது

சாணக்கிய நீதியின் அடிப்படையில் பெரியவர்களை மதிக்காத வீட்டில் லட்சுமி தேவி இருக்க மாட்டார். மேலும் வீட்டிற்குள் மகிழ்ச்சியும் வராது.  பெரியவர்களை மதித்து நடக்காத வீட்டில் செல்வம் நிலைக்காது. அதனால் பாரிய தீய விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும்.

Read Previous

UPI பரிவர்த்தனை ஆக.1 (இன்று) முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Read Next

தாய் கண்டித்ததால் மதுபோதையில் வந்த மகன்கள் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular