சாதத்திற்கு அருமையான சிக்கன் செட்டிநாடு மசாலா செய்முறை விளக்கம்..!!

தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி – சிறிது துண்டு
பூண்டு – 10 பல்
தேங்காய் – 5 கீற்று
சோம்பு- 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
[பாட்டி மசாலா] தனியா தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு
பட்டை – 1 சிறு துண்டு

செய்முறை :

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, தேங்காயம், சோம்பு, மிளகு, சிறிது வெங்காயம், [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] தனியா தூள் எல்லாவற்றையும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் கழுவி வைத்துள்ள சிக்கனையும் போட்டு நன்கு வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் போட்டு இறக்கவும்.

விசில் போனவுடன் குக்கரைத் திறந்து கொத்தமல்லி தழை தூவி திக்கான பதம் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

சூப்பரான சிக்கன் செட்டிநாடு மசாலா ரெடி.

Read Previous

சேந்தமங்கலத்தில் தமிழர் தேசம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..!!

Read Next

பூஜை அறையில் கண்ணாடி வைப்பது எதற்காக?.. அதனால் இவ்ளோ நன்மைகள் கிடைக்குமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular