நம் அனைவர் வீட்டிலும் சாதம் மீதம் ஆவது ஒரு பிரச்சினையாகவே கருதப்படுகிறது. இனி அப்படி சாதம் மீதமானால் அதை வைத்து பக்கோடா செய்து பாருங்கள். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள்:
சாதம் – 2 கப்
கடலைமாவு – 1 கப்
கார்ன் பிளார்-2 ஸ்பூன்
இஞ்சி- 1 துண்டு
பச்சைமிளகாய் – 2
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை குட்டியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து பழைய சாதத்தை சேர்த்து மைத்துக் கொள்ளவும்.
இந்த சாதத்துடன் கடலை மாவு கான் பிளவர் மாவு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு பிசைந்த மாவை பக்கோடா போல போட்டு நன்கு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பக்கோடா தயார்.



