சாதம் வடித்த கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன தெரியுமா..??

 

 

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். அதனால் தான் கோடையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள்.வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

ஞாபக மறதி

ஆய்வுகளில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் ஞாபக மறதியைத் தடுக்கும் என்று நிரூபிக்கப்படாவிட்டாலும், ஒருசில செய்திகள் சாதம் வடித்த கஞ்சி தண்ணீருக்கு ஞாபக மறதியைத் தடுக்கும் திறன் உள்ளதாக சொல்கிறது. இதனால் தான் நம் தாத்தா, பாட்டியின் ஞாபக சக்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் உள்ளதோ..?சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். அதனால் தான் விவசாயிகள் காலையில் விவசாயம் செய்ய தோட்டத்திற்கு செல்லும் முன் வடித்த கஞ்சி நீரை குடித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் நன்கு எனர்ஜியுடன் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்ய முடிகிறது.

Read Previous

இந்தக் கதை நமக்கான வாழ்க்கை பாடங்களை கற்றுத்தரும்..!! கண்டிப்பா அனைவரும் படிங்க..!!

Read Next

இல்லத்தரசிகளே கண்டிப்பாக இந்த சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular