இல்லத்தரசிகளே கண்டிப்பாக இந்த சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்..!!

 

கேக் செய்யும்போது பாத்திரத்தை அடிக்கடி திறக்க கூடாது என்பது போல இட்லி வேக வைக்கும் போதும் அடிக்கடி திறக்கக் கூடாது. 7-10நிமிடத்தில் வேகவிட்டு எடுக்க சரியாக இருக்கும்.

தயிரை மோராக்கும்போது ஆடை நீக்காமல் அப்படியே தண்ணீர் ஊற்றி மோராக்கக் கூடாது. மிக்ஸியில் இட்டு ஓடியதும் மேலாக உள்ள வெண்ணையை எடுத்துவிட்டு பின் மோராக்க உடலுக்கு நல்லது.

சட்னி தாளிக்கையில் கடுகு தாளித்து சட்னி மேல் ஊற்றி பரிமாறவும் முன் கிளற, சட்னி நீண்ட நேரம் நன்றாக இருக்கும். ரொம்ப கலக்கிவிட சட்னி விரைவில் புளித்து கெட்டுப்போகும்.

கொத்தமல்லி, புதினா போன்றவற்றில் சட்னி அரைக்கும் முன் இலேசாக வதக்கிவிட்டு அரைக்க பசுமை மாறாமல் இருக்கும்.நீண்ட நேரம் வதக்க நிறம் மாறி விடுவதுடன் சத்தும் வீணாகும்.

தேங்காயை ஓட்டை ஒட்டி ரொம்ப திருகக்கூடாது என்பதுபோல ஜாம், ஊறுகாய் மீந்ததை ஒட்ட காலியாகும் வரை உபயோகிக்க கூடாது. பாட்டிலின் சைடில் கறுப்பு படிந்து, பூஞ்சை ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது.ஃப்ரிட்ஜில் நிறைய மாவு அரைத்து வைக்கக்கூடாது. அப்படி வைக்க வேண்டுமெனில் மாவிற்கு மொத்தமாக உப்பு போடாமல் தனித் தனி டப்பாவில் வைத்து மறுநாளுக்கு உள்ளத்திற்கு மட்டும் முதல் நாள் உப்பு போட்டு கரைத்து வைக்க மாவு புளிக்காமல் பதமாக இருக்கும்.ஃப்ரிட்ஜில் சமைத்த உணவை தனியாகவும், ஃப்ரெஷ்ஷானதை தனியாகவும் வைக்க ஒன்றின் வாசனை மற்றதில் ஏறாமல், கிருமி வராமல் தடுக்கலாம்.

தோசைக்கும், சப்பாத்திக்கும் தனித்தனி கல்லை உபயோகிக்க வசதியாக இருக்கும்.புளிக்காய்ச்சல் தயாரிக்கையில் புளிக்கரைசலை கெட்டியாக கரைத்து கொதிக்க வைக்கவேண்டும். நீண்ட நேரம் தண்ணியான கரைசல் கொதித்தால் சுவை மாறிவிடும்.

 

Read Previous

சாதம் வடித்த கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன தெரியுமா..??

Read Next

ஜலதோஷம் மற்றும் தலைவலி வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் ஓமவல்லி இலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular