சிக்கனை இப்படி செய்து பாருங்கள்..!! அனைவருக்கும் புதிதான ஒரு செய்முறை..!!

அசைவு உணவு என்றால் பிடிக்காதவர்கள் வெறும் சிலர் தான் இருக்கின்றனர். அசைவ உணவை காரமாக சாப்பிட்டால் தான் அனைவருக்கும் பிடிக்கும். எப்போதும் ஒரே மாதிரி சிக்கன் சமைக்காமல் இப்படி வித்தியாசமாக கிரீன் சில்லி சிக்கன் ஒரு முறை செய்து பாருங்கள். இதை எப்படி செய்வதென்று இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – ஒரு கிலோ
பச்சை மிளகாய் – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 10
இஞ்சி – 1 துண்டு
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
வறுத்த சீரகப்பொடி – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – 1/2 கப்
உப்பு – சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

நன்றாக சிக்கனை சுத்தமாக கழுவி மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு ஜாரில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்னர் ஊற வைத்த சிக்கனை கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து 15 நிமிடங்களுக்கு ஊறவைத்துக்கவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு போட்டு தாளித்த பின் இதில் ஊற வைத்த சிக்கனை போட்டு இரண்டு பக்கமும் நன்றாக கிளறி விட்டு அதில் மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு மூடியை போட்டு நன்றாக வேக விடவும். தண்ணீர் வற்றி வரும் போது அடுப்பை அனைத்து இறக்கவும். அவ்வளவுதான், சுவையான கீரின் சில்லி சிக்கன் தயார்.

Read Previous

ஒரு தந்தையும் மகளும்.. மிகவும் அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

களைப்பாக வரும் குழந்தைகளுக்கு இந்த சிற்றுண்டியை கொடுத்து பாருங்கள்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular