தேவையான பொருட்கள்:
▢1/4 கிலோ சிக்கன் ▢10 பல் பூண்டு ▢3 பச்சை மிளகாய் ▢2 ஸ்பூன் மிளகுதூள் ▢1/2 ஸ்பூன் சீரகத்தூள் ▢1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் ▢1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ▢உப்பு தேவையான அளவு ▢1 ஸ்பூன் கறிவேப்பிலை ▢கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை:
▢ முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கழுவி வைத்துள்ள சிக்கனில் சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு போட்டு பிசறி தனியாக வைத்து விட வேண்டும்.
▢ ஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு மஞ்சள் தூள் போட்டு வைத்துள்ளசிக்கனை அலசி விட வேண்டும். சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனில் சீரகத்தூள், மிளகுத்தூள்,உப்பு மஞ்சள் தூள், சேர்த்து நன்றாக பிசறி கொள்ள வேண்டும்.
▢ அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ளபூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவும்.
▢ பிறகு அலில் சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.சிக்கன் தண்ணீர் விடும் என்பதால் தண்ணீர் சேர்க்கவேண்டாம் சிக்கனை கிளறிவிட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.
▢ அவ்வப்போது மூடியை திறந்து நாளை கிளறி விட்டுக் கொண்டிருக்கவும். தண்ணீர் வற்றி சிக்கன் நன்றாகவெந்த பிறகு மேலே கொத்தமல்லி தழைகளை தூவி கிளறி விடவும்.
▢ அவ்வளவுதான் பரிமாறுவதற்கு சுவையான ருசியான சிக்கன் மிளகு வறுவல் தயார்.




