ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில்
சீரகம், மிளகு, சோம்பு, கொத்தமல்லி, பட்டை, இலவங்கம் சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும். இதனுடன் பூண்டு, மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வறுத்து 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். இதில் சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
இதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் சிறிது தண்ணீர் சேர்த்து மூடி 10 நிமிடங்கள் வேக விடவும்.
இதில் புளிக்கரைசல் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வெந்து மசாலா சுண்டியதும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இதில் தேங்காய் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும். இது சாம்பார் சாதம், ரசம், தயிர்சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.




