அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி உயர்ந்துள்ளதால், மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்தின் தாக்கத்தால் 16 மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பாதுகாப்பு முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு, அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.




