சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், மூட்டு வலி, தசை வலி, உடல் அசதி ஆகியவை காணப்படுகின்றன. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்கவும், உரிய நேரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




