தேவையான பொருள்: கருஞ்சிரகம் 10 கிராம் சோம்பு 10 கிராம் இலவங்கப்பட்டை 5 கிராம் குங்குமப்பூ 2 கிராம் தண்ணீர் 200 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு தண்ணீரை தவிர மீதம் உள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்கு பொடியாக்கி கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும். மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பிறகு நீர் 100 மி.லி ஆன பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இப்போது நறுமணமிக்க தேநீர் தயார் ஆகிவிடும். இந்த தேநீரை நாளொன்றுக்கு 20 மி.லி என்கிற வீதத்தில் உணவிற்கு பின் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் சினை நீர்ப்பை கட்டி முற்றிலுமாக குணமாகும்.