சிறுமியை முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் சித்தூரைச் சேர்ந்தவர் காலோஷா (23). இவர் வேலூர் குடியாத்தம் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து சாம்பிராணி போடும் வேலை செய்து வந்தார். கடந்த 2023-ல், ஒரு கடையில் சாம்பிராணி புகை போடும்போது, அங்கு சிறுமியை முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பான வழக்கில் தற்போது அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.




