தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராகவும் நடிகராகவும் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் விஜய் ஆண்டனி. விஜயின் தந்தை இயக்கிய சுக்கிரன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அனைத்து விதமான பாடல்களையும் இசையமைத்து ரசிகர்களை வியக்க வைத்தவர். தன்னுடைய பாடல்கள் மூலம் சினிமாவில் தனக்கான முத்திரையை பதித்து விட்டார். இதனைத் தொடர்ந்து நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்க அதே உற்சாகத்துடன் தொடர்ந்து ஹீரோவாகவே பயணிக்க ஆரம்பித்தார்.
அது மக்கள் மனதிலும் பதிந்து விட்டது. அதனால்தான் நானே அந்த டைட்டிலை அவர்களுக்காக விட்டுக் கொடுத்து விட்டேன். நட்பு ரீதியாகத்தான் நான் அதை செய்தேன். எனக்கு ஒரு தயாரிப்பாளரின் வழியும் வேதனையும் நன்றாகவே தெரியும். இது போன்ற டைட்டில் பிரச்சனை வருவது இயல்பான ஒன்றுதான். வாகனத்தை ஓட்டி செல்லும் போது விபத்து எதிர்பாராத விதமாகத்தான் நடக்கும். திட்டமிட்டு அதனை யாரும் செய்ய மாட்டார்கள். நான் இந்த விஷயத்தை அப்படிதான் பார்க்கிறேன் என விஜய் ஆண்டனி செய்தி அவர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் தான் பராசக்தி. இந்தத் திரைப்படத்தின் டைட்டிலில் தான் பிரச்சனை எழுந்தது குறிப்பிடத்தக்கது.




