கர்ப்பிணி பெண்களின் முன்கூட்டியே உடலில் ஹீமோகுளோபின் பரிசோதனை நடப்பது போல் தற்பொழுது கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருக்கிறதா என்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்..
கர்ப்ப காலத்தில் பெண்கள் பெரிதும் ஏதாவது ஒரு அவதிக்கு உட்படுகின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குறித்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார் அதன்படி கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காய்ச்சலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது முதல் நாளிலேயே முறையான காய்ச்சல் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் மேலும் அதற்கான பொருத்தமான ஆன்டிபயாட்டிக் அல்லது வைரஸ் எதிர்ப்புக்கான சிகிச்சை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார், இப்படி முன்கூட்டியே பரிசோதனைகள் நடத்தப்படும் பொழுது கர்ப்பிணி பெண் மற்றும் கர்ப்பிணி பெண்ணின் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அவர்களின் பிரசவ காலத்தில் அவர்களுக்கு தேவையான மன வலிமை மட்டும் உடல் ஊக்கமும் இருக்கும் என்றும் இதனால் ஆரோக்கியமான முறையில் ஒவ்வொரு கர்ப்பிணிகளும் குழந்தைகளை பெற்றெடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்..!!




