சுவையான ரோட்டு கடை காளான் மசாலா..!! இனி வீட்டிலேயே இப்படி செஞ்சு பாருங்க..!!

சுவையான ரோட்டு கடை காளான் மசாலா..!! இனி வீட்டிலேயே இப்படி செஞ்சு பாருங்க..!!

ரோட்டுக்கடை காளான் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை சிற்றுண்டி இந்த ரோட்டு கடை காளான். ஆனால் அதை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைக்கவும். 250 கிராம் காளான் துண்டுகளுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கால் கப் மைதா மாவு சிறிதளவு சோள மாவு அரிசி மாவு சேர்த்து பிசிறவும். அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசிற வேண்டும். அடுப்பை ஆன் செய்து ஒரு பாத்திரத்தில் எண்ணெயை காய விட்டு காளான் துண்டுகளை போட்டு மொறு மொறுப்பாக பொறித்தெடுக்க வேண்டும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி வெங்காயம் தக்காளி கச்சாப் சில்லி சாஸ் மற்றும் மிளகாய் தூள் சிறிதளவு மல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் சோள மாவு கரைசல் மற்றும் பொரித்த காளான் துண்டுகள் சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின்பு பரிமாறினால் சுவையான ரோட்டு கடை ஸ்டைல் காளான் தயார். நீங்களும் உங்க வீட்ல செஞ்சு பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

Read Previous

கோதுமை இனிப்பு போண்டா செய்வது எப்படி?.. இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!!

Read Next

பால் பணியாரம்..!! இது எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாமல் முழிக்கிறீர்களா அப்போ இந்த பதிவை படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular