பீகார் மாநிலத்தின் பூர்னியா மாவட்டத்தில் நேற்று (ஜூலை 6) மாலை ஒரு கும்பல், மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை எரித்துக் கொலை செய்துள்ளது. விசாரனையில், உயிரிழந்த 45 வயது பெண் ஒருவர், சூனியம் வைத்ததால் அப்பெண் உள்பட குடும்பத்தினரை கொலை செய்ததாக குற்றவாளிகள் தெரிவித்ததாக குறப்படுகிறது. இறந்தவர்கள் பாபு லால் ஓரான் (50), அவரது தாயார் காண்டோ தேவி (70), மனைவி சீதா தேவி (45), மகன் மஞ்சித் குமார் (25) மற்றும் மருமகள் ராணி தேவி (22) என அடையாளம் காணப்பட்டுள்ளது.




