தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “அதிமுகவை ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல விஷயம்” என தெரிவித்துள்ளார். மேலும், “அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. கடைசி நேரத்தில் மாற்றங்கள் வரும். அனைவரையும் இணைக்கும் முயற்சிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை என்று செங்கோட்டையன் கூறியது அவரது கருத்து. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை” என்றார். சென்கோட்டையன் இன்று (செப்.5) நடத்திய செய்தியாளர் சந்திப்புக்கு நயினார் கருத்து தெரிவித்துள்ளார்.




