தேவையான பொருட்கள்:
நண்டு – 1/2 கிலோ
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
அரைக்க:
தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
உலர் மிளகாய் – 4
செய்முறை:
கடாயில் எண்ணெய் சூடாக்கி வெங்காயம் வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்கவும். அரைத்த மசாலா, தூள்கள் சேர்த்து கொதிக்க விடவும். நண்டு சேர்த்து தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும்.




