நீட் தேர்வுக்கு எதிராக நடத்த திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகன பிரச்சாரப் பயணத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருப்பதை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கடுமையாக கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியாரின் கொள்கைகளை அடையாளமாகக் கொண்டுள்ளதாகக் கூறும் தவெக அரசு, சமூகநீதி சார்ந்த முக்கிய பிரச்சினையான நீட் விவகாரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அதன் நிலைப்பாட்டுக்கு முரணானதாக உள்ளது என்று விமர்சித்துள்ளார்.
மேலும், நீட் எதிர்ப்பு இயக்கத்தின் பிரச்சாரப் பயணத்திற்கு தடை விதிப்பது, சமூகநீதி மற்றும் கல்வி உரிமைக்காக குரல் கொடுப்பவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தடையை மீறி அமைதிப் பயணத்தை நடத்தும் வாய்ப்பு இருந்தாலும், முதற்கட்டமாக சட்ட ரீதியாகவே இந்த விவகாரத்தை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், நீதிமன்றத்தின் மூலம் உரிய தீர்வை நாட உள்ளதாகவும் கி. வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.




