சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான ரூ.500 கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் டிராவல்ஸ் அதிபர் ஷபீக்ரகுமான் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.34 லட்சம் அசல் பணம் மற்றும் வெளிநாட்டு செலாவணியும் கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, தொடர்புடைய மலேசிய பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளநோட்டு கும்பலின் பின்னணி மற்றும் தொடர்புகள் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




