திமுகவில் மறுசீரமைப்பு?.. உதயநிதி ஸ்டாலின் பதவி மாற்றம் குறித்து தகவல்..!!

 

திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து உதயநிதி ஸ்டாலின் விலக உள்ளதாக தனியார் இதழ் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

 

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், தொண்டர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, உதயநிதி ஸ்டாலினுக்கு செயல் தலைவர், முதன்மை செயலாளர் அல்லது பொருளாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் ஏதேனும் ஒன்று வழங்கப்படலாம் என்றும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

குறிப்பு: இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. திமுக தரப்பில் இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Read Previous

சென்னையில் ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: மலேசிய பெண் உட்பட 3 பேர் கைது..!!

Read Next

ராஜஸ்தானில் போலீஸ் சோதனை: ஹோட்டலில் இருந்து ஆடையின்றி ஓடிய நபர் – வைரல் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular