ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில், ஒரே ஒரு இடத்தில் மட்டுமல்லாமல் பல இடங்களில் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாக தவெக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை சிம்மக்கல் பகுதியில் இன்று (ஜூலை 18) மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நில மோசடி தொடர்பாக முழுமையான மற்றும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.




