வெங்காய வரத்து குறைவு காரணமாக சென்னையில் வெங்காய விலை கிடுகிடு உயர்வு..
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ரூபாய் 60க்கு விற்கப்பட்ட வந்த ஒரு கிலோ வெங்காயம் ஒரே நாளில் இன்று ரூபாய் 40 உயர்ந்து கிலோ 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது புறநகர் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 130 க்கு விற்பனை செய்யப்படுகிறது வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர், மேலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படும் கர்நாடகா மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி சுமார் 60 வாகனங்களில் 1300 டன் நாசிக் வெங்காயம் வரும் நிலையில் இன்று 500 டன் மட்டுமே குறைவான வெங்காயம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அதே சமயம் மற்ற காய்கறிகளின் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றம் இல்லை என வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளனர், இதனால் சமைக்கும் பெண்மணிகள் வெங்காயத்தின் கிடுகிடு விலையை கண்ட பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர், இனிவரும் நாட்களில் வெங்காயத்தின் விலை குறையுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது..!!




