சென்னை – பெங்களூரு சாலையில் பயங்கர விபத்து: 25-க்கும் மேற்பட்டோர் காயம்!

 

 

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் தனியார் தொழிற்சாலை பேருந்து, முன்னால் சென்ற கனரக லாரி மீது பயங்கரமாக மோதியது.

 

சுமார் நள்ளிரவு 1 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

 

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

37-வது பிறந்தநாளுக்கு சில நாட்களே இருந்த நிலையில் நடிகை ஹேடன் பேனட்டியர் மரணம்!

Read Next

அரசியலில் 50 ஆண்டுகளை கடந்த செங்கோட்டையன்: தொடர் வெற்றிகளின் பயணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular