செவ்வாய்க்கிழமை அன்று என்ன செய்யலாம்..?? என்ன செய்யக்கூடாது..?? கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சிக்கோங்க..!!

 

நவகிரகங்களுக்குள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகமாகும்.செவ்வாய் கிரகத்திற்கு மங்கள காரகன் என்ற சிறப்பு பெயர் உண்டு.செவ்வாய் என்றாலே மங்கலமான நாள் என்று
நம் முன்னோர்கள் கூறுவதுண்டு.செவ்வாய்க்கிழமையன்று
எந்த ஒரு காரியத்தையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழு பலனையும் அடைய முடியாது என்றும் சொல்வார்கள்.

முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையில் தான் மௌன அங்காரக விரதம் ஒன்று பின்பற்றப்படுகிறது.தர்ம சாஸ்திரத்தில் இதைப்பற்றி மிகவும்
சிறப்பாக விரிவாக கூறப்பட்டுள்ளது.ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று மௌன விரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை அடைய முடியும் என்று சொல்லப்படுகிறது.செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபடக்கூடாது.அவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்றால் அது அவர்களுக்கு பெரிய பிரச்சனையாகவே மாறிவிடும்.

செவ்வாய் பகவானை, செவ்வாய்க்கிழமை தோறும் வழிபாடு செய்து வர நம்முடைய வாழ்க்கையில் செல்வவளம் நிச்சயம் அதிகரிக்கும்.பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சொத்து சேர்க்கை இருக்கும்செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கடன்
பிரச்சனை உள்ளவர்கள் செவ்வாயன்று விரதம் மேற்கொண்டு முருகனை
பூஜை செய்தால் தோஷம் நீங்கும். அவர்களின் கடன் சுமையும் விரைவாகவே தீர்ந்துவிடும்.அதேபோல் மங்களகரமான பொருட்கள் வாங்குவதற்கும், மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கும் செவ்வாய்க்கிழமை ஏற்ற தினமாகும்.

இந்த தினத்தில் எந்த
ஒரு சுபகாரியங்கள் மேற்கொண்டாலும் அது மிகவும் மங்களகரமானதாக இருக்கும்கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் செவ்வாய் ஓரையில் சிறிது சிறிதாக கடனை திருப்பிக் கொடுத்து வர உங்களது
கடன் விரைவில் அடைந்து அந்தப் பிரச்சினையில் இருந்து விரைவாக வெளிவர முடியும்.ஏதேனும் நோயினால் அவதிப்படுபவர்கள்
செவ்வாய் ஓரையில் வைத்தியம் மேற்கொண்டால் விரைவிலேயே நோயிலிருந்து விடுபடுவீர்கள்.முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று முருகன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய்
தீபம் ஏற்றி வந்தால் நோய் நொடியில்லாமல் நிறைவான செல்வங்கள் பெற்று இனிமையான வாழ்வினை அடைய முருகப் பெருமான் திருவருள் புரிவார்.

அதிலும் செவ்வாய்
கிழமையில் பிறந்தவர்கள் இதனை தொடர்ந்து செய்ய அவர்களுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும்வாழ்நாள் முழுவதும் செல்வந்தர்களாக வாழ செவ்வாய்க்கிழமை கட்டாயம் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பூஜை அறையில்
6 மண் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து, முருகப் பெருமானை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான வழிபாடாக சொல்லப்பட்டுள்ளது.இப்படி செவ்வாய்க்கிழமை வழிபாட்டை மனதார நம்பிக்கையோடு தொடர்ந்து செய்து வர, வீடு, நிலம்,
போன்ற அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் கட்டாயம் வரும்.இந்த தீப வழிபாட்டுடன் சேர்த்து, செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டிய தானம் துவரம் பருப்பு தானம்.வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய்கிழமைகளில் உங்களால் எவ்வளவு
முடியுமோ அதாவது ஒன்பது என்ற கணக்கில் அந்த துவரம்பருப்பை தானம் கொடுக்க வேண்டும்.

ஒரு கிலோ தானத்திற்காக துவரம்பருப்பை கடையிலிருந்து வாங்குகிறீர்கள்
என்றால், அதிலிருந்து
100 கிராம்
எடுத்து விடுங்கள்.அப்போது 900 கிராம் என்ற கணக்கு வரும் அல்லவா?இப்படி 9 என்ற எண், தானம் கொடுக்கும் அளவில் வரவேண்டும்.9 என்ற எண் நீங்கள் தானம் கொடுக்கப்படும் அந்த பொருளின் எடையில் இருக்க வேண்டும்.இப்படி சூட்சுமமாக இந்த துவரம்பருப்பை தானம் கொடுத்து வரும் பட்சத்தில் உங்களுடைய வீட்டில் பொருள் சேர்க்கை இருக்கும்.

நீங்கள் செல்வந்தர்களாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.இப்படி இந்த துவரம்பருப்பை யாருக்கு தானமாக கொடுப்பது. இயலாதவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு, ஆசிரமத்திற்கு, இப்படி
யாருக்கு வேண்டுமென்றாலும் இந்த துவரம்பருப்பை தானம் கொடுக்கலாம்செவ்வாய் கிழமை அன்று அன்னம் எதுவும் அருந்தாமல், அம்பிகையை மனதார வேண்டிக்கொண்டு விரதம் இருந்தால், நாம் நினைக்கும் காரியங்கள் எல்லாம் வெற்றியில் வந்து முடியும் என்று சொல்லப்படுகிறது.செவ்வாய் கிழமையில்
நல்ல விஷயங்களை
செய்வது நல்லது.

ஏனென்றால் கிரங்களில் செவ்வாய் ஆனது மங்களக்காரன் என்றும் சொல்லப்படுகிறது.எனவே செவ்வாய் கிழமையும் நல்ல நாளாக இருக்கிறது.நம் முன்னோர்கள் செவ்வாய் என்றாலே மங்களகரமான வார்த்தை என்றும் சொல்வார்களாம்.செவ்வாய் கிழமை அன்று எதையும் செய்ய விரும்பாதவர்கள், வாழ்க்கையில் முன்னேற மாட்டார்கள் என்றும் சொல்வார்கள்.

செவ்வாய் கிழமை என்ன செய்யக்கூடாது:

செவ்வாய் கிழமை அன்று எந்தவிதமான சம்பவங்களிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.அப்படி ஈடுபாட்டால் அது தீமையில் வந்துதான் முடியும்.இது போன்ற காரணங்களினால் தான் செவ்வாய் கிழமையில் சிலர் விரதம் இருப்பார்கள்.செவ்வாய் கிழமை அன்று
கடன் வாங்குவதே தவிர்ப்பது நல்லது.ஏனென்றால் செவ்வாய்கிழமையில் கடன் வாங்கினால் கடன் தொடரும் என்றும் சொல்லப்படுகிறது.தங்கத்தை அடகு வைப்பதை தவிர்ப்பது நல்லது.ஆனால் செவ்வாய் கிழமை அன்று தங்கத்தை வாங்கினால், தங்கம் அதிகமாவே சேரும்.அதேபோல் செவ்வாய் அன்று வீட்டையும் சாமி இடத்தையும் சுத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது.அதேபோல் செவ்வாய் கிழமை அன்று தலைமுடி வெட்டுவதை தவிர்ப்பது நல்லது.அதேபோல் நகம் வெட்டுதல், சேவிங் செய்தல் போன்ற விஷயங்களை செவ்வாய் கிழமை அன்று தவிர்ப்பது நல்லது.செவ்வாய் கிழமை அன்று வீட்டில் தேவையில்லாத பொருட்களை தூக்கி போடுவதை தவிர்ப்பது
நல்லது.இது போன்ற விஷயங்களை கடைபிடிப்பதால் செல்வம் தானாகவே சேரும், கடன் பிரச்சனை நீங்கும்.

Read Previous

பழைய சப்பாத்தியில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா..?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

Read Next

வயிற்று வலி முதல் சிறுநீர் எரிச்சல் வரை அனைத்தையும் சரி செய்யும் கற்றாழை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular