சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்த சம்பவம் நடந்துள்ளது.
பாலக்காடு வடக்கஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அஞ்சுமூர்த்தி மங்கலம் அருகே நள்ளிரவு 12.30 மணியளவில் சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர். சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய திருத்தணியில் இருந்து 25 பக்தர்கள் வந்துள்ளனர். திடீரென அவர்கள் வந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து, டிவைடரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து பின்னால் வந்த லாரி ஒன்று அந்த பேருந்து மீது மோதியுள்ளது. இதில் சுமார் 15 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆலத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




