சோம்பின் மருத்துவ குணங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

 

நாம் சமையலில் பயன்படுத்தும் சோம்பில் பலவித மருத்துவக் குணங்களும் நிறைந்துள்ளது.

பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.

சோம்பு, ஈரல் நோயைக் குணமாக்கும் ஒரு இயற்கை மருந்தாகும். சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் தேன் கலந்து தினந்தோறும் இரு வேளைகளிலும் 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் சரியாகும்.

சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் மற்றும் வறண்ட இருமல் போன்றவை குணமாகும்.

சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.

சோம்பின் சூடான கசாயம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப் போக்கினை கட்டுப்படுத்துகிறது.

சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.

சோம்பிற்கு எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மையுண்டு. எனவே உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை, கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.

அதிகளவு குளிர் காய்ச்சல் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு தினந்தோறும் வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.

 

Read Previous

அதலைக்காய் மருத்துவ பயன்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

கஷ்டப்படாம சர்க்கரை நோயை ஓட ஓட விரட்ட..தினமும் இந்த விதைய கொஞ்சம் வாயில போடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular