ஜலதோஷம் மற்றும் தலைவலி வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் ஓமவல்லி இலை..!!
ஓமவல்லி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். இந்த இலையில் இருந்து சாற்றை எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து நெற்றியில் பற்று போட்டால் ஜலதோஷம் தலைவலி மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். அதுபோல் நீங்கள் அதிகப்படியான கபம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த இலையை அரைத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இவற்றுடன் ஏலக்காய் கிராம்பு ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்கு கலந்து தினமும் இரண்டு வேளை குடிக்க வேண்டும். இதனை நீங்கள் மூன்று நாள் மட்டும் குடித்து வந்தால் விரைவில் நல்ல முடிவை காண்பீர்கள். அதுமட்டுமின்றி இந்த இலையை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தாலும் நல்ல தீர்வு கிடைக்கும்.




