ஜொலிக்கும் அழகு பெற கண்டிப்பா விளக்கெண்ணையை இப்படி பயன்படுத்தி பாருங்க..!!

 

விளக்கெண்ணெய் இது ஆமணக்கு விதையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். விளக்கெண்ணெய் பல மருத்துவ முறைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மற்றும் விளக்கெண்ணையில் உள்ள ஆரோக்கிய பலன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது அதை பற்றி தற்போது பார்க்கலாம்.

விளக்கெண்ணையை தினமும் தூங்கச் செல்லும் முன் கண்களைச் சுற்றி தழுவி கொண்ட படுத்தால் கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடலாம். தினமும் இரவு தூங்குவதற்கு முன் கண் இமைகளில் விளக்கெண்ணையை தடவி வந்தால் இமைகள் அழகு பெறும்.

அதுமட்டுமின்றி குளிப்பதற்கு முன் விளக்கெண்ணையை உடலில் தடவிக் கொண்டு குளித்தால் சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதோடு அழகாக ஜொலிக்கும். முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்கு விளக்கெண்ணெய் நல்ல தீர்வாக இருக்கிறது. முகப்பருக்கள் மீது தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலனை நாம் பெற முடியும்.

மேலும் சருமத்தில் ஏற்படும் சிவப்பு தடிப்பு மற்றும் அரிப்பு போன்ற பாதிப்புகளுக்கும் விளக்கெண்ணையை சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடல் முழுவதும் தடவி வந்தால் நல்ல பலனை பெறலாம். ரெண்டு ஸ்பூன் விளக்கெண்ணெயில் சுத்தமான பருத்தி துணியை நனைத்து கழுத்து மற்றும் முகம் பகுதியில் தேய்த்து நான்கு நிமிடங்கள் மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுவதன் மூலம் புத்துணர்ச்சியை பெற முடியும். நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணையை சம அளவு கலந்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம் இவ்வாறு குளிப்பதன் மூலம் உடல் உஷ்ணம் குறைந்து கூந்தல் மிருதுவாகவும் மினுமினுப்புடனும் இருக்கும். பாதங்களில் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

Read Previous

பாத்ரூமில் உள்ள அழுக்கு கறைகளை நீக்குவதற்கான சிறந்த தீர்வு இதுதான்..!! கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

Read Next

நடை பயிற்சியின் போது தண்ணீர் குடிக்கலாமா..?? குடிக்க கூடாதா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular