டீயுடன் சுவையான சோயா கபாப் சாப்பிடுங்கள்..!!

இன்றைய காலகட்டத்தில் அருந்தாதவர்கள் என்று யாரும் இல்லை டீயுடன் தனது காலை நேரத்தை தொடங்குகின்றனர் பலரும், அப்படி இருக்கும் பட்சத்தில் டீயுடன் சுவையான சுவையா கபாப் சாப்பிடுவது இன்னும் அந்த நாளை அழகாகும்..

சோயா கபாப் செய்ய முதலில் சோயா துண்டுகளை வெந்நீரில் ஊற வைக்க வேண்டும், அதன் பிறகு கடலை பருப்பை சுமார் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும், இப்போது சோயா துண்டுகளை தண்ணீரில் இருந்து எடுத்து நன்றாக பிழிந்து கொள்ளவும், இதற்குப் பிறகு சோயா துண்டுகள் மற்றும் ஊறவைத்த கடலைப்பருப்பை மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும், இப்போது இந்த பேஸ்டில் கடலை மாவு, பொடிபொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி தலையை சேர்த்துக் கொள்ள வேண்டும், அதன் பிறகு அதனுடன் உப்பு மல்லித்தூள் சீரகத்தூள், சாட் மசாலா, காய்ந்த மாங்காய் தூள் கரம் மசாலா சேர்த்து கலக்கவும், இப்போது அதனுடன் ஒரு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும் இதற்குப் பிறகு உங்கள் கைகளில் சிறிய எண்ணை தடவி கலவையில் இருந்து கபாப்பை தயாரிக்கவும், பின் அவற்றை ஒரு கடாயில் போட்டு வறுத்து எடுக்கவும் இப்போது சுவையான சோயா கபாப் தயார் இதை பச்சை சட்னி அல்லது தக்காளி சட்னி உடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது காலை நேரங்களில் மாலை நேரங்களில் டீக்கு சைடிஸாக இணைத்து சாப்பிடலாம்…!!!

Read Previous

பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர்..!!

Read Next

கன்னட பட உலகில் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular