வெறும் வயிற்றில் டீ குடித்தால் இவ்வளவு ஆபத்தா..?? அல்சர் முதல் நீரிழப்பு வரை மருத்துவ உலகம் விடுக்கும் பகீர் எச்சரிக்கை..!!

Oplus_131072

வெறும் வயிற்றில் டீ குடித்தால் இவ்வளவு ஆபத்தா? அல்சர் முதல் நீரிழப்பு வரை மருத்துவ உலகம் விடுக்கும் பகீர் எச்சரிக்கை!

காலையில் எழுந்ததும் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதாக நம்பி பலரும் வெறும் வயிற்றில் டீ குடிக்கின்றனர்.

ஆனால், இந்த பழக்கம் உடலில் கடுமையான அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் வாயுத்தொல்லையை (Gas Problem) ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாம் டீயில் அதிகளவில் சர்க்கரை சேர்த்து குடிப்பதால், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சட்டென உயர்த்தி, சர்க்கரை நோய் (Diabetes) வரும் அபாயத்தை அதிகரிக்கிறது.

அதுமட்டுமின்றி, அளவுக்கு அதிகமாகச் சர்க்கரை உண்பதால் நம் நுரையீரலும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிக்காமல், முதலில் ஒரு டம்ளர் சாதாரணத் தண்ணீர் குடித்து, அதன் பின்பே டீ குடிப்பதே ஆரோக்கியமானது என்று மருத்துவ உலகம் அறிவுறுத்துகிறது.

தேநீரை எப்போதும் அதிகச் சூட்டுடன் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மிகச் சூடாகக் குடிப்பதால் நம் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு வயிற்றுப்புண் அதாவது அல்சர் (Ulcer) போன்ற தீவிரப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

எனவே டீயை எப்போதும் சற்று ஆறவிட்டு மிதமான சூட்டில் குடிப்பதே நல்லது. மேலும், உடல் எடையைக் குறைக்கப் பலரும் குடிக்கும் கிரீன் டீயை அளவுக்கு அதிகமாகக் குடித்தால், உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவது தடைப்பட்டு ‘அனீமியா’ (Anemia) எனப்படும் இரத்த சோகை பாதிப்பு ஏற்படும்.

அதேபோல், இரவில் தாமதமாக டீ குடிப்பதால் அதில் உள்ள கேஃபின் நம் தூக்கத்தைக் கெடுக்கும். டீயுடன் சேர்த்துச் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளில் அதிகக் கொழுப்பு இருப்பதால், அது செரிமானத்தைப் பாதித்து உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 

Read Previous

லாட்டரி டிக்கெட் விற்ற தவெக நிர்வாகி கைது..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

“திமுக தனித்து போட்டியிட வேண்டும்”.. தொண்டர்கள் வலியுறுத்தல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular