தக்காளி குருமா செய்வது எப்படி..??

Oplus_131072

தக்காளி குருமா செய்வது எப்படி..??

தேவையான பொருட்கள் :

தக்காளி 5 – 6பொpய
வெங்காயம் 2
சோம்புத் தூள் அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் அரை டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள்அரை டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்2
தேங்காய்ப் பால்ஒரு கப்
உப்புதேவைக்கேற்ப

தாளிக்க:
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – கால் டீஸ்பு+ன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பு+ன்

செய்முறை :

தக்காளியின் அடிப்பகுதியில் கூட்டல் குறி வடிவில் கத்தியால் கோடிட்டு, கொதிக்க வைத்த தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு வைக்கவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு தக்காளியிலுள்ள தோலை நீக்கிவிடவும்.

தோல் நீக்கப்பட்ட தக்காளியை மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்து வைக்கவும். குறிப்பு : தக்காளியை கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு வைத்தெடுத்து தோலை உரித்தால் தோல் எளிதில் வந்துவிடும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு தூள் வகைகள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

அத்துடன் தேங்காய்ப் பால் சேர்த்து சிம்மில் வைத்து கொதிக்கவிட்டு, மல்லித் தழை தூவி இறக்கவும். தேங்காய் பாலுக்கு பதிலாக தேங்காயை துருவி அரைத்து அக்கலவையினைச் சேர்க்கலாம்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இட்லி, தோசை, பணியாரம்.

 

Read Previous

பெற்றோர்கள் தினம் – அறியாமலே கடந்து போகும் அன்பின் புனித நாள்..!!

Read Next

கணவனும் மனைவியும் கட்டாயம் படிக்க வேண்டிய வாழ்க்கை வழிகாட்டி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular