ஒரு பாத்திரத்தில் நான்கு பழுத்த நாட்டு தக்காளியை வேக வைக்கவும்
தக்காளி வெந்தவுடன் நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளி சேர்க்க விரும்புவோர் இரண்டு தக்காளி சேர்த்து நெல்லிக்காய் அளவு புளியை சேர்க்கவும்.
மிளகு இரண்டு தேக்கரண்டி
சீரகம் இரண்டு தேக்கரண்டி
பெருங்காயம் சிறிய துண்டு
தோல் உரிக்காத பூண்டு ஆறு பல் ஒரு உரலில் சேர்த்து நன்கு இடித்து எடுத்துக் கொள்ளவும்.
கடைசியாக அதனுடன் ஒரு கைப்பிடி மல்லி இலையும் லேசாக இடித்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் போட்டு தாளித்து கருவேப்பிலை, மூன்று காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி இடித்த மிளகு சீரகமும் சேர்த்து நன்கு வதக்கவும்.
கரைத்து வைத்திருந்த தக்காளி கரைசலும் சேர்த்து மஞ்சள் தூள் அரைத்து கரண்டியும் தேவையான அளவு உப்பும் சேர்த்து நுரை கட்டி பொங்கி வரும் போது அடுப்பை அணைக்கவும்.சுவையான மற்றும் எளிமையான தக்காளி ரசம் தயார்.




