“தங்கமா? தங்க முலாம் பூசப்பட்டதா?” – முத்தரசன் கேள்வி!

 

 

தவெக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறக்கூடாது என சிபிஐ மூத்த தலைவர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

 

தங்க மோதிரம் வழங்கும் திட்டத்துக்கான டெண்டரில் ஒரு நிறுவனம், ஒரு கிராம் தங்கத்துக்கான செய்கூலி உள்ளிட்ட கூடுதல் செலவுகளுக்கு ஒரு பைசா என குறைந்த விலைப்புள்ளி கோரியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.15,000 எனக் கூறப்படும் நிலையில், அரசு வழங்கவுள்ள மோதிரம் உண்மையான தங்கமா அல்லது தங்க முலாம் பூசப்பட்டதா என முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மேலும், திட்டத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு, எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

LPG சிலிண்டர் eKYC காலக்கெடு நீட்டிப்பு!

Read Next

காலை வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் என்ன நன்மை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular