தஞ்சாவூரின் பிரபலமான சூரியகலா இனிப்பை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.
முதலில் கோவாவுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து பூரணம் தயாரித்துக் கொள்ளவும். பின்னர் மைதா மாவில் நெய், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறிய உருண்டைகளாகப் பிரிக்கவும்.
மாவை சிறிய வட்டங்களாகத் தேய்த்து, நடுவில் கோவா பூரணத்தை வைத்து மற்றொரு மாவு வட்டத்தால் மூடி, ஓரங்களை கைமுருக்கு போல் மடிக்கவும்.
தயார் செய்த சூரியகலாக்களை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து, கம்பிப்பதம் இல்லாத பிசுபிசுப்பான சர்க்கரைப் பாகில் சுமார் 5 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்தால், சுவையான தஞ்சாவூர் ஸ்பெஷல் சூரியகலா தயார்!




