தஞ்சை ஸ்பெஷல் தவளை அடையை சாப்பிட்டு இருக்கிறீர்களா..!! அசத்தலான செய்முறை இதோ..!!

தஞ்சை பேமஸ் தவளை அடையை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம். இட்லி தோசைக்கு பதிலாக சிறந்த மாற்றாக இருக்கும் இந்த அடை.

தேவையான பொருட்கள்:

கால் கப் புழுங்கல் அரிசி

கால் கப் துவரம் பருப்பு

கால் கப் கடலைப்பருப்பு

கால் கப் உளுந்து

1 கப் பச்சரிசி

நறுக்கிய பச்சை மிளகாய்

நறுக்கிய இஞ்சி

அரை டீஸ்பூன் கடுகு

தேவையான அளவு உப்பு.

செய்முறை:

கடலை பருப்பு பச்சரிசி உளுந்து புழுங்கல் அரிசி ஆகியவை அனைத்தையும் கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளுங்கள்.

5 மணி நேரம் இதை புளிக்க வைத்து எண்ணெயில் சீரகம் கடுகு, பச்சை மிளகாய் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

அதனை மாவில் கொட்டி கிளறி எடுத்துக் கொள்ளுங்கள். தோசை கல்லை எடுத்து எண்ணெய் ஊற்றி இதை தோசையைப் போல் வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் தஞ்சை ஃபேமஸ் தவளை அடை தயார்.

Read Previous

NMDC நிறுவனத்தில் 995 பேருக்கு ஜாக்பாட் வேலைவாய்ப்பு..!! ரூ.35,000/- வரை மாத ஊதியம்..!!

Read Next

உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்கிறதா..!! இதுதான் காரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular