தண்ணீர் குடிக்க சரியான முறை..!! இதை செய்தால் உங்களது உடலில் எந்த பிரச்சனையும் வராது..!!

நாம் அனைவரும் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஆனால் மிக சுலபமாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் முறைகளை நாம் கண்டு கொள்வதில்லை. அப்படி ஒன்றுதான் மண்பானையில் நீர் குடிப்பது. இப்போதுள்ள தலைமுறை அதை மறந்து விட்டனர். நம் அனைவரின் வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி இருக்கிறது. மேலும் அதில் தண்ணீர் வைத்து குடிப்பதும் வழக்கமாகிவிட்டது. இதனால் நமது உடலுக்கு பல பிரச்சினைகளும் வருகின்றது.

மண்பானையில் நீர் வைத்து குடித்தால் நமது உடலுக்கு பல ஊட்டச்சத்துக்கள் வந்து சேரும். மண்பானையில் இருக்கும் நீர் இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கும். மேலும் மண்பானையில் சிறு துளை வழியாக தண்ணீர் வெளியேறும் பொழுது வெப்பம் எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கப்படும். தண்ணீரை பிளாஸ்டிக் அல்லது சில்வரில் வைத்திருந்தால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பொழுது சூடாகிவிடும். ஆனால் இந்த மண்பானையிலோ அப்படியே ஆகாது.

அதனால் வெயிலுக்கு சென்று வந்தபின் மண்பானையில் இருக்கும் தண்ணீரை குடித்தால் நமது தொண்டைக்கு மிகவும் இதமாக இருக்கும். இது களிமண்ணால் செய்யப்பட்டது. களிமண் காரத்தன்மை கொண்டது என்பதால் தண்ணீரை சமநிலைப்படுத்துகிறது. மேலும் மண்பானையில் இருந்து நீர் குடிக்கின்ற பொழுது நமது உடல் வெப்பம் குறைக்கப்படுகிறது. மேலும் வெயில் காலத்தில் ஏற்படுகின்ற கண்ணெரிச்சல் வாய் புண் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் நீக்க மிகவும் உதவி செய்கிறது.

Read Previous

Institute of Banking Personnel Selection (IBPS)-யில் அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.3,02,169/- வரை மாத ஊதியத்துடன் அடித்த ஜாக்பாட்..!!

Read Next

சாப்பிடும் போது இந்த தவறு செய்தால் மரணம் கூட ஏற்படலாம்..!! மக்களே கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular