தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஒரு வாரமாக திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புற மாடவீதியில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, நடிகர் தனுஷை நேரில் காணவும், அவருடன் புகைப்படம் எடுக்கவும் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் திரண்ட காட்சிகள் மற்றும் அதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தனுஷின் புதிய படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெறுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




