தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்..!!

சென்னை மின்சார பேருந்துகள்: ஒப்பந்த நிபந்தனை மீறியதால் தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்

 

சென்னையில் இயக்கப்படும் 625 மின்சார பேருந்துகள் நாளொன்றுக்கு தலா 200 கிலோமீட்டர் இயக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், அசோக் லேலண்டின் OHM நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

 

ஆனால், பேருந்துகளில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பழுதுகள் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட தினசரி இயக்க இலக்கை எட்ட முடியவில்லை.

 

இதையடுத்து, ஒப்பந்த விதிமுறைகளின்படி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டு வரை, OHM நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.9 கோடியை அபராதமாக செலுத்தியுள்ளது.

 

பேருந்துகளின் செயல்திறனை மேம்படுத்தவும், சேவை தடையின்றி நடைபெறவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிறுவனம் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

உத்தரப் பிரதேசத்தில் சோகம்: ஆற்றில் குளித்த 12 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை..!!

Read Next

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த இயக்குநர் களஞ்சியம்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular