உத்தரப் பிரதேசத்தில் சோகம்: ஆற்றில் குளித்த 12 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை..!!

 

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ராயிச் மாவட்டத்தில், வயல் வேலை முடித்துவிட்டு தனது உறவினருடன் அருகிலுள்ள ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சுனில் (12) என்ற சிறுவனை முதலை தாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த ஜூலை 16 நடைபெற்ற இந்த சம்பவத்தில், சிறுவனை காப்பாற்ற முடியாமல் உறவினர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் பல மணி நேரம் தீவிரமாக தேடியதையடுத்து, சிறுவனின் உடல் பாகங்களை மீட்டனர்.

 

இந்த சோகச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் அருகே முதலைகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Read Previous

வெறும் வயிற்றில் இஞ்சி நீர் குடித்தால் என்ன நன்மைகள்?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular