தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் டெங்கு போன்ற காய்ச்சல்கள் அதிக அளவில் பரவுவதால் மேற்கூரைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும். பள்ளி கட்டடத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.அடுத்தாக பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை மற்றும் மதிய உணவு முற்றிலும் சுத்தமாக செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும். மேலும் பள்ளிகளில் மின் சாதனங்களை மாணவர்களை கொண்டு இயக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




