தயிர் சாதத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி..??

Oplus_131072

தயிர் சாதத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி ……

தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் – 10
எலுமிச்சம்பழம் – 5
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1/4 கோப்பை
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

நெல்லிக்காயை சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வைத்து வேக வைக்கவும்.

நெல்லிக்காய் சூடு ஆறியதும், பல் பல்லாக உதிர்த்து கொட்டை நீக்கவும்.

அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

வெந்தயம், சீரகம் ஆகியவற்றை தனியே வறுத்து ஆறியதும் தூளாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் வெந்தயம் மற்றும் சீரகத்தூளைச் சேர்க்கவும்.

தாளித்த பொருட்களை ஊறுகாயுடன் சேர்த்து உடனடியாக பரிமாறவும்.

சூப்பரான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி…….

 

Read Previous

நொடிப்பொழுது மயக்கம்( சிறுகதை)..!! மனதை நெகிழ வைத்த அருமையான பதிவு..!!

Read Next

மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular