கல்யாண பந்திகளில் மட்டுமல்லாமல் விசேஷ வீடுகள் என்றாலே தயிர்மோர் வடைக்குழம்பு வாசனை ஆளையே தூக்கும்..
தைரியம் வடை குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு ஒரு கப், பச்சரிசி கால் கப் துவரம்பருப்பு கால் கப், பச்சை மிளகாய் இரண்டு தயிர் ரெண்டு கப் பெரிய வெங்காயம் ஒன்று பொடியாக நறுக்கியது மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், தாளிக்கு தேவையான பொருட்கள் : எண்ணெய் தேவைக்கேற்ப, கடுகு ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், உளுந்தம் பருப்பு ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன், கருவேப்பிலை ஒரு கொத்து, செய்முறை உளுத்தம் பருப்பினை ஊறவைத்து உப்பு சேர்த்து கெட்டியாக வடை மாவு பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும், பச்சரிசியும் துவரம் பருப்பும் தண்ணீர் விட்டு ஊற வைத்து பச்சரிசி மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும், ஒரு கப் தயிரில் தண்ணீர் சேர்த்து அடித்து மோர் ஆக்கி கொள்ள வேண்டும், பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் உளுந்து கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும் இதில் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும், இத்துடன் அரைத்த மசாலா மோர் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும், அரைத்த உளுந்து மாவை வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும் மோர் குழம்பு கொதித்ததும் ஆறவிட வேண்டும் ஆரியபின் இதில் மிச்சம் இருக்கும் ஒரு கப் தயிர் ஊற்றி கலந்து சுட்ட வடையை போட்டு ஊற விட வேண்டும் பிறகு சுவையான தயிர் மோர் வடை குழம்பு ரெடி…




