சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அனுமதியின்றி நுழைந்து நீட் தேர்வுக்கு எதிராக கோஷமிட்டதாக, பிரபல பாடகர் அறிவு உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்த நேரத்தில், பாடகர் அறிவு மற்றும் அவருடன் வந்தவர்கள் தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழைந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்வு முறையில் உள்ள குறைபாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது.
பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, விதிமுறைகளை மீறியதாகக் கூறி பாடகர் அறிவு உள்ளிட்ட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் தலைமைச் செயலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.




