தலையில் முடி இருந்தாலே பேன் பிரச்சனை ஏற்படுவது வழக்கம், அப்படி ஏற்படும் பேன்களை அழிப்பதற்கு சிறந்த மருந்தாக வேப்பிலையும் கருவேப்பிலையும் பெரிதும் உதவுகிறது..
இன்றைய தலை முறையினர் பலருக்கு பொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனை அதிகம் அதே போல் முடி உள்ளவர்களுக்கு தலையில் பேன் பிரச்சனைகளும் ஏற்படுகிறது, எவ்வளவு தான் சீப்பு கொண்டு பேனை வைத்தாலும் மீண்டும் மீண்டும் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அதிகம், அப்படி இருப்பவர்களுக்கு நிரந்தர தீர்வாக விளங்குவது வேப்பிலையும் கருவேப்பிலையும், ஆம் வேப்பிலை கருவேப்பிலையை சம அளவு எடுத்து நீர் சேர்த்து கொதிக்கவிட்டு அந்த நீரை கொண்டு தலையில் அலசினால் பேன் இருக்காது முடி கருமையாகவும் முடி உதிர்தலை தடுக்கவும் இது உதவுகிறது, அதேபோல் வழுக்கை தலைகளுக்கு சிறந்த மருந்தாகவும் வேப்பிலை மற்றும் கருவேப்பிலை உதவுகிறது, கருவேப்பிலையை வாரத்திற்கு ஒரு மறை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வருவதன் மூலம் வலுக்கை தலையிலும் முடியை காணலாம்..!!




